கல்யாண சாம்பார் ரெசிப்பி

இரண்டு கப் துவரம்பருப்பு

ஒரு எலுமிச்சம்பழம் அளவு புளி

2 தக்காளி-

3 வெங்காயம்

6 பச்சை மிளகாய்

10 பல்பூண்டு

தேவையான அளவுபெருங்காயம்

தேவையான அளவுத ண்ணீர்

தேவையான அளவு மஞ்சள்தூள்

தேவையான அளவு மிளகாய் தூள்

1 மாங்காய்

1 /4 கிலோ கத்தரிக்காய்

2 முருங்கைக்காய்

தேவையான அளவு உப்பு

ஒரு ஸ்பூன் தனியா

4 காய்ந்த மிளகாய்

கால் ஸ்பூன் வெந்தயம்

ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு

2 சிட்டிகை பெருங்காய்த்தூள்

தேவையான அளவு கருவேப்பிலை தாளிக்க

தேவையான அளவு கொத்தமல்லி

செய்முறை-

ஸ்டெப் 1

துவரம் பருப்பு தக்காளி வெங்காயம் பச்சைமிளகாய் பூண்டு பெருங்காயம் இவை அனைத்தும் நன்றாக தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 2

பின் மற்றொரு பாத்திரத்தில் வாணலியை வைத்து அதில் தண்ணீர் விட்டு முருங்கைக்காய் கத்திரிக்காய் போட்டு சேர்த்து மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக ஒரு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

ஸ்டெப் 3

பின் கொதித்துக் கொண்டிருக்கும் காய்கறிகளோடு 80% வெந்ததும் மாங்காயை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் மாங்காய் கொடுத்து சிறிது நேரத்தில் பருப்பு கரைசலை எடுத்து அதில் போட வேண்டும்.

ஸ்டெப் 4

பின் மிளகாய் தனியா வெந்தயம் கடலைப்பருப்பு சிறிது பெருங்காயம் நன்றாக வறுத்து எடுத்து பொடி செய்து அந்த சாம்பாரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கிளறி இறக்கி பின் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் வெந்தயம் பூண்டு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக தாளித்து அதை சாம்பாருடன் சேர்த்து தாளித்து அதில் கொட்டி கொத்தமல்லி தூவி இறக்கினால் கல்யாண சாம்பார் தயார்!